Type Here to Get Search Results !

Tamil Song - Yaar Ennai Kaivittalum - யார் என்னைக் கைவிட்டாலும்

யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்

1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்

2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே

3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்

4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே

5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே

6. எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்