இயேசுவின் சாட்சிகள் நாம் பரதேசிகள்
சிலுவை பாதையில்
தோத்திரம் பாடி நாம் மோட்சபுரி நாடி
யாத்திரை செய்கிறோம் (2)
1. தரிசித்து நடவாமல்
விசுவாசத்தாலே நாம்
பரிசுத்த பாதையில்
போகிறோம் மோட்ச
யாத்திரிகர் நாம்
பாரினில் அந்நியராய் (2)
2. உலகம் நமக்குப் பாத்திரம் அல்லதில்
கிலேசம் வேண்டினி
கர்த்தர் சிரசில் முள்முடியாகில்
நமக்கு வேறென்ன? (2)
3. மேகங்கள் போன்ற சாட்சிகள்
நம்மை சூடிநந்து கொள்ளவே
இயேசுவை நோக்கி பாவ பாரங்கள்
பின் தள்ளி ஓடுவோம் (2)
4. நம்மை இரட்சிக்கவே சிலுவை
சகித்தோர் அருமை நேசரை
நினைக்கும்போது சோர்புகள் தீர்ந்து
யாத்திரை செடீநுயலாம் (2)
5. நாம் அவர் புத்திரர் ஆகவே
சிட்சிப்பார் ஆகிலும் நேசிப்பார்
நன்மையல்லாமல் தீமைகள் ஏதும்
நம் பிதா நல்கிடார் (2)