ஆவியானவரே அறுவடை நாயகரே
ஆத்தும ஆதாய ஊழியம் செய்ய வவ்லமை தருபவரே
ஆண்டு நடத்திடுமே
வாரும் தேவ ஆவியே
விரைந்தாளும் எங்களையே
அனுதினமும் நிறைத்திடுமே
ஜெய ஜீவியம் செய்திடவே
அனுதினம் நிறைத்திடுமே ஜெய ஊழியம் செய்திடவே
1.என் சபையை நான் கட்டுகிறேன் என்று சொன்னவரே
பல ஆயிரம் ஆயிரம் கிராமங்களில்
சபைகளை எழுப்பிடுமே சத்தியம் நிலைத்திடவே
சமுதாயம் தழைத்திடவே
2.ஆத்தும தரிசனம் அளித்திடுமே
இதயத்தை ஆட்கொள்ளுமே துதி வேண்டுதல்,
விண்ணப்ப ஆவிதனை சபைகளில் ஊற்றிடுமே
தேவஜனம் ஆர்த்தெழவே பலவானை கட்டிடவே
3.கடைமுனை மட்டும் செல்லும்படி
கட்டளை தந்தவரே உயிர்த்தெழுதலின் வல்லமை தரித்தவராய்
அகிலத்தை வென்றிடவே உலகத்தின்
முடிவுவரை எங்களோடு இருப்பவரே
4.கசப்பின் வேரை அகற்றிவிடும் அன்பை பொழிந்தருளும்
சபைபேதங்கள் யாவும் நீக்கிவிடும்
ஒற்றுமை ஓங்கச் செய்யும்
அன்பே மொழி உறவின் வழி உலகத்தை வெல்லும் இனி