Type Here to Get Search Results !

Tamil Song - Naan Paadm Poothu - நான் பாடும் போது என் உதடு

நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும்                                 
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா         (சங் 71:23)
அக்களித்து அகமகிழும்

1. நான் பாடுவேன் நான் துதிப்பேன்      (சங் 71:14)
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு 
நிறைந்து இருக்கிறது
      
நாள்தோறும் உம்மை துதிப்பேன்        (சங் 71:14)
நம்பிக்கையோடு துதிப்பேன்

2. எப்போதும் நான் தேடும்        (சங் 71:3)
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும் 
எல்லாம் நீர்தானே 

3. கருவறையில் இருக்கும் போது         (சங் 71:6)
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே கொண்டுவந்தீர்

4. இளமை முதல் இதுவரையில்         (சங் 71:5)
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர் 
நோக்கமும் நம்பிக்கையும்

5. முதிர்வயது ஆனாலும்          (சங் 71:9)
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே