இந்த பூவுலகில் வாழும் மனிதா
உந்தன் பாவ வாழ்வில்
விடுதலை வேண்டுமா
நித்திய ஜீவன் தரும்
கர்த்தர் இயேசுவை நம்பி
விசுவாசம் வைத்தே மகிழ்வாய் (2)
1.பொருள் இன்றி ஏழை பொருள் தன்னை தேடி
கால் போன போக்கில் ஓடுகிறான்
(2)
பணக்கார சீமான் மனதாலே நிம்மதி
கிடைக்காமல் நாளும் வாழ்கிறான் (2)
இந்த பூவியிலே எவர்க்கும்
இல்லை நிம்மதி
அந்த நிம்மதியைப் பெற இயேசுவே
கதி அவர் பதம் சேர முழுமனதாய்
சம்மதி பின்பு காலமெல்லாம்
அடைவாய் அமைதி
2.உனக்காகத்தானே மனுக்கோலம் கொண்டு
மரித்தாரே தேவன் சிலுவையிலே (2)
உன் பாவம் யாவும் தன் மீது சுமந்து செங்குருதி சிந்தி மீட்பளித்தார் (2)
அந்த நாயகனின் தியாகத்தினாலே உந்தன்
பாவங்களும் உன்னைவிட்டுப் போனதே
இந்த நல் மேய்ப்பன் மந்தையில் சேர்வதே
நித்திய வாழ்வுதனை அடையும் மார்க்கமே
3.இனிப்பான கரும்பை சுவைக்காமல் யாரும்
ருசிகாண முடியுமோ சொல் மனமே இரட்சிக்கின்ற
தேவனின் சக்தியினை உணர
நம்பிக்கை வைத்தே வந்தால் நலம் பெறலாம் (2)
இந்த பூவியிலே எவருக்கும் இல்லை நிம்மதி
அந்த நிம்மதியைபெற இயேசுவேகதி
அவர்பதம்சேரமுழுமனதாய்சம்மதி பின்பு காலமெல்லாம்
அடைவாய் நிம்மதி