கிருபை சொரிந்திடுமே - உமது
கிருபையின் அரசே சபையின் சிரசே!
1. அருள் மாரி பெற்றிடவே - ஆ ஆ ஆ ஆ
காரிருள் அகன்றிடவே
பாரில் பாவிகள் பரனடி பணிய
2. இயேசுவின் நாமமதை - ஆ ஆ ஆ ஆ
நேசர்கள் உயர்த்திடவே
பேசும் அடியார் பெலனடைந்திடவே
3. உன்னதபெலனீய - ஆ ஆ ஆ ஆ
வன்மையுடன் நடக்க
கன்மலையும்மைப் பின் தொடர
4. ஆதிச் சபையதுபோல் - ஆ ஆ ஆ ஆ
ஆவியின் வரங்களினால்
அலங்கரித் தெமை ஆட்கொண்டுமது
5. தூய்மையுடன் துதிக்க - ஆ ஆ ஆ ஆ
தூய்மை அகம் தரிக்க
காய முழுவதும் உமக்கே படைக்க!
6. ஆயத்தமாகிடவே - ஆ ஆ ஆ ஆ
நாயகன் வருகையிலே
மாயமான யாவையும் அகற்ற