சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார் - 2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் – 2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர் – 2
எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே – 2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானின் சூழ்ச்சிகள் ஒளியுமே – 2 - அவரே
வாலிபம் என்னை விட்டு மறையுமே - சர்வ
வல்லவர் எண்ணிலென்றும் இருப்பிரே - 2
வாழ்வினை உம் கையில் தருகிறேன்
உந்தன் பாதையில் என்னை வழி நடத்தும் - 2 - அவரே
பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட - மகா
பரிசுத்தர் நீர் எண்ணில் வாருமே - 2
பாவத்தின் வேரெல்லாம் அழிந்திட - உம்
பரிசுத்த வல்லமை தந்தீரே - 2 - அவரே