Type Here to Get Search Results !

Tamil Song Lyrics | இயேசுவின் சேனையே வாரீர் | Yesuvin senaiye vaareer

இயேசுவின் சேனையே வாரீர் 

இயேசுவின் ஒளியை பாரீர் -2

இருள் சூழ்ந்த உலகமெங்கும் 

எரிந்து பிரகாசிப்போமே -2- அனலாய் 


எரிந்து பிரகாசிக்கும் வாலிபம் 

அனல் குன்றாத ஜீவியம் 

எரிந்து பிரகாசிக்கும் வாலிபம் 

தேவன் விரும்பும் காரியம் 


தினமும் நிறைந்த அபிஷேகம் 

உன் வாழ்வில் அதுவே நிர்ப்பந்தம் -2

உனக்குள்ளே ஜீவன் விளங்கட்டும் 

மாந்தருக்கு ஒளி வீசட்டும் -2- எழுந்து 


பாலிய இச்சை விட்டோடி 

தேவ மனிதரை நாடிடு - 2

அனலுள்ள ஐக்கியத்தில் நிலைத்தே 

ஜொலித்து பிரகாசித்திடு - 2- தொடர்ந்து 


காலைதோறும் அவர் பாதம் 

இருளில் பிரகாசிக்கும் அவர் வேதம் -2 

ஜெபத்தில் தேவ  சத்தம் கேட்டிடு 

நாளெல்லாம் பிரகாசித்திடு - 2- துணிந்து