என்னைக் காண்கிறவர்
எந்தன் பாரங்கள் சுமக்கின்றவர் -2
என்னைக் கைவிடாதவர்
இயேசு என்னோடே உண்டு - 2
சோதனை என் தெய்வம் அனுமதித்தால்
தப்பிக்கும் வழியை காட்டிடுவார் - 2
ஏன் என்று கேட்பதில்லை நான்
எந்தன் நன்மைக்கென்று அறிந்திடுவேன் - 2
தீயில் நான் வீழ்ந்தாலும்
அதிலும் நான் தனியே இல்லை - 2
விழுந்தது தீயில் இல்லை
இயேசுவின் கரங்களில் தான் - 2 - சோதனை என்
சோதனை என் தெய்வம் அனுமதித்தால்
தப்பிக்கும் வழியை காட்டிடுவார் - 2
ஏன் என்று கேட்பதில்லை நான்
எந்தன் நன்மைக்கென்று அறிந்திடுவேன் - 2
தேவன் என் அனுகூலம்
அதை நன்றாய் அறிந்திடுவேன் - 2
அவர் எந்தன் பட்சமானால்
விரோதமாய் இருப்பவன் யார் - 2
தூய இரத்தம் எனக்காக சிந்தினதால்
தூய்மையாக்கி என்னை நிறுத்திடுவார் - 2
தூதரோடு நின்று அவரை
நான் துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன் - 2
ஆவியின் வரங்களினால்
அடியாரை நிறைத்திடுமே - 2
மகிபனின் சந்நிதியில்
மாசற்றோனாய் நின்றிடவே - நான் - 2 - தூய இரத்தம்