Type Here to Get Search Results !

உமக்குதான் உமக்குதான் - - Jebathotta Jeyageethangal Vol 40 | Fr.S.J.Berchmans | Tamil Christian Songs

உமக்குதான் உமக்குதான்

இயேசையா என் உடல் உமக்குத்தான்-5


1.ஒப்புக்கொடுத்தேன் என் உடலை

பரிசுத்த பலியாக-2

உமக்குகந்த தூய்மையான

ஜீவ பலியாய் தருகின்றேன்-2


பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான்


2.கண்கள் இச்சை உடல் ஆசைகள்

எல்லாமே ஒழிந்துபோகும்-2

உமது சித்தம் செய்வதுதான்

என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்-2


பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான்


3.உலக போக்கில் நடப்பதில்லை

ஒத்த வேஷம் தரிப்பதில்லை-2

தீட்டானதைத் தொடுவதில்லை

தீங்கு செய்ய நினைப்பதில்லை-2


பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான்




Tags