Type Here to Get Search Results !

என்னைக் காண்பவரே தினம் காப்பவரே - Jebathotta Jeyageethangal Vol 40 | Fr.S.J.Berchmans | Tamil Christian Songs

என்னைக் காண்பவரே தினம் காப்பவரே

ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் 

சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்

நான் அமர்வதும் நான் எழுவதும் 

நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்


எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்

எல்லாமே அறிந்திருக்கின்றீர்

நடந்தாலும் படுத்தாலும் அப்பா 

நீர் அறிந்திருக்கின்றீர்


நன்றி ராஜா இயேசு ராஜா


முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச் 

சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்

உம் திருக்கரத்தால் தினமும் என்னைப் 

பற்றி பிடித்திருக்கின்றீர்


கருவை உம் கண்கள் கண்டன 

மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே

அதிசயமாய் பிரமிக்கத்தக்கப் 

பக்குவமாய் உருவாக்கினீர்



Tags