Type Here to Get Search Results !

Tamil Song - 690 - Vaarum Devaa Vaana Senaigaludane

வாரும் தேவா வான சேனைகளுடனே
வந்து வரமருள் அளித்திடுமே!

1. பாவம் அகற்றினீரே - உந்தன்
பாதம் பணிந்திடுவேன் எந்தன் (2)
பரிசுத்தர் போற்றிடும் பரம தேவா
தரிசிக்கத் திருமுகமே (2)

2. ஆதி அன்பிழந்தே மிக
வாடித் தவித்திடுதே - ஜனம் (2)
மாமிசமானவர் யாவரிலும்
மாரியைப் பொழிந்திடுமே (2)

3. அற்புத அடையாளங்கள் - இப்போ
அணைந்தே குறைந்திடுதே - வல்ல (2)
ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
அதிசயம் நடத்திடுமே (2)

4. கறைகள் நீக்கிடுமே - திருச்
சபையும் வளர்ந்திடவே - எம்மில் (2)
விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
விரைந்தெங்கும் எழுப்பிடுமே (2)

5. கிருபை பெருகிடவே - உம்
வருகை நெருங்கிடுதே - மிக (2)
ஆத்ம மணாளனைச் சந்திக்கவே

ஆயத்தம் அளித்திடுமே (2)