தரிசு நிலங்கள் அனைத்தும் பலன் கொடுக்க வேண்டுமே
வேத வசன விதைகள்
இன்றே விதைக்கப்பட வேண்டுமே (2)
தீர்க்கதரிசனம் உரைக்கப்படனும்
வேதவாக்குத்தத்தங்கள் நிறைவேறனும்
1.வேத வசனம் அது தேவ வசனம்
அதை அறிவிப்பது நம்கடனல்லவா(2)
விதைத்திடுங்கள் வசனம் விதைத்திடுங்கள்(2)
கோதுமை மணிகளாய் பயன்பட வாழுங்கள்
(2)
2.இயேசுவின் இரட்சிப்பினைச் சொல்வது
இலட்சியமே இலக்கை இழந்தால்
உப்புத்தூண் அல்லவா (2)
தயங்குவதா தரித்து நிற்பதா? (2)
கலப்பையில் கைவைத்துப் பின் திரும்பிப் பார்ப்பதா? (2)