எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு எந்தன் வாழ்வினில் புதுமலர்ச்சி
எந்தன் நடை உடைபாவனை சொல் செயலும் எந்தன் இயேசுவால்
புதிதாயின புதுவாழ்வு புது ஜீவன் புதுபாடல் என்னை சந்தித்த இயேசு தந்தார்!
ஆடிப்பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன் ஆண்டவர் சமூகத்தை அலங்கரிப்பான்
2.கதரேனரின் கடற்கரையில் கல்லறையிடை
வாசம் செய்த பொல்லா ஆவிமனிதன்
நாதர் பாதம் பணிய நல்ல
அற்புத மாற்றம் பெற்றான்!
3.ஓடையில் உருண்டோடி வரும்
சின்னக் கற்களும் வடிவம் பெறும்
செல்லத் தாவீதுக்கு கோலியாத்தை
வீழ்த்த ஆயுதமாகிவிடும்!
4.சிலுவையண்டை வந்திட்டேனே
இயேசுவின் கரம் பற்றிட்டேனே எந்தன் இயேசுவுடன்
கொண்ட உறவு என்னை
புது வடிவமாய் திகழச் செய்யும் !
5.காட்டாத்தி மரம் ஏறி ஒளிந்த
குள்ளன்சகேயுவும்மாற்றம் பெற்றான் உள்ளபடி
யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான் வெள்ளம்
போன்றுள்ளம்பூரிப்படைந்தான்!!