Type Here to Get Search Results !

Tamil Song - Nandri Baligal Seluthiyae Naangal - நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் 
ஆலயம் கூடி வந்தோம்
துதி பலிகள் செலுத்தியே நாங்கள்
உம்மை போற்ற வந்தோம் (2)

கர்த்தர் செய்த நன்மைக்காக
நன்றி செலுத்த வந்தோம்
நம்மை மறவா அவர் கிருபை
எண்ணியே துதிக்க வந்தோம்

1. உடன்படிக்கை எனக்குத் தந்து 
உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்
மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை
ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர்

2. வாதைகள் என்னை சூழ்ந்தபோது
செட்டைகளாலே எனை மறைத்தீர்
பாதைகள் எல்லாம் காக்கும்படி
தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர்

3. தேவைகள் நெருக்கி நின்றபோது
அற்புதமாகப் பெருக வைத்தீர்
கண்ணீரின் பாதையில் திகைத்தபோது
கண்மணியே என்று என்னை அழைத்தீர்