எங்கே தேடுவேன்
என் நேசர் இயேசுவை - நான் எங்கே
தேடுவேன்
1. உன்னதராஜனே - ஆ - என்
உத்தம நேசரே
உம் உன்னத அன்பாலே - ஆ - என்
உள்ளம் உருகுதே
2. மலரின் நடுவிலோ நேசரை மல்லிகை
வனத்திலோ மாடி வீடதிலோ
இல்லையேல் மன்னர் மத்தியிலோ
3. அழகாய்
மான்போலே - நேசர்
அலைந்து வாராரே - அரச குமாரருள்
ஆ என் அன்பர் ஒருவரே
4. காட்டுமரங்களுள் நேசர்
கிச்சிலி மரம்போலாம்
கமழும் மலர்களுள் நேசர்
இன்ப லீலியாம்
5. அழகு வாய்ந்தவர் - நேசர்
அன்பு மிகுந்தவர்
அறிவு மிகுந்தவர் - நேசர்
அனைத்தும் அறிபவர்
6. காலைத் தேடுவேன் நேசரைக்
கண்டு மகிழ்வேன்
கருத்தாய்
பாடுவேன் நேசரின்
காதல் நாடுவேன்