Type Here to Get Search Results !

மகா மகா பெரியது உம் இரக்கம் - Tamil Song - Jebathottam Vol 41

மகா மகா பெரியது உம் இரக்கம்
ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை
தேற்றிடும் கிருபை
உயிர்ப்பிக்கும் கிருபை
விலகாத மாறாத கிருபை

1. மிகக் கொடிய வேதனையில்
இடுக்கண்கள் மத்தியில்
விழுந்து விட்டேன் உம் கரத்தில் - 2
கொள்ளைநோய் விலகனும்
ஜனங்கள் வாழனும்
உம் நாமம் உயரனுமே - 4
உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2

2. பெலவீனங்களைக் குறித்து
பரிதவிக்கும் மிகப்பெரிய 
பிரதான ஆசாரியரே - 2
ஏற்ற வேளை உதவி செய்யும்
கிருபையை நான் நம்பியே
கிருபாசனம் வந்திருக்கிறேன் - 4
உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2

3. கிழக்கு மேற்கு உள்ள தூரம் 
குற்றங்கள் அகற்றுகின்ற
கிருபையுள்ள நல்ல தகப்பனே - 2
பூலோகம் பரலோகம் 
எவ்வளவு உயர்ந்ததோ 
அவ்வளவு கிருபை உயர்ந்தது. -4
உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2

4. திருப்பாதம் காத்திருந்து
மன்றாடும் பிள்ளைகள் மேல்
மனதுருகும் நல்ல தகப்பனே - 2
பஞ்சத்திலே பசியாற்ற
நோயிலிருந்து காப்பாற்ற
நோக்கமாய் இருப்பவரே - 4
உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2