ஜெயம் கொள்ளுவதுவே சிறந்தது!
1. ஆதியின் அன்பில் குறைந்தவரே
பாவி என்றுணர்ந்து மனந்திரும்பும்
ஆரம்பம் வீரமாய் இருந்தது போல்
அந்தமும் அலங்காரம்
காணச் செய்யும்
ஜெயம் கொண்டோன் சிறந்தவன்
ஜெயம் ஜெயம் அல்லேலூயா
2. மரண பரியந்தம் உண்மையுடன்
மரித்து உயிர்த்தோரில் அன்புகூரு
களையாம் பிலேயாம் போன்றவரை
மலையாமல் போராடி வென்று விடு
3. யேசபேல் போன்று நாசமாகி
கட்டில் கிடையாய் போழ்விடாதே
ஏசுவின் இரத்தத்தில் சுத்தமாகி
மட்டில்லா மகிழ்ச்சியைக் கண்டு விடு
4. வெற்றியின் வாழ்வு கண்டவரே
பயந்து நடுங்கிக் காத்துக் கொள்ளும்
தோல்வியால் நெஞ்சம் துவண்டவரே
இயேசுவின் பக்கம் வந்து சேரும்!