மன்னுருவானவர் ஆதி
மன்னுருவானர் - ஏதும்
தன்னிகரில்லா ஆதி
மன்னுருவானார்!
1. மன்னன் தாவீது வம்சக்
கன்னிய ம்மாது அந்தக்
கன்னியென்னும் அன்னை மரி
தன்னிடமாகதன்னிடமாக, ஆதி
தன்னிடமாக-ஏதும்
2. வல்லமைத் தேவன் தீர்க்கர்
சொன்ன மெய்
ஜீவன் - சிறு
வெல்லைமலைக் கல்லுறுத்த
புல்லணையிலே புல்லணையிலே,
ஆதி புல்லணையிலே - ஏதும்
3. எப்பொருள் மேலா நின்ற
விற்பன நூலான் ஆதி
பொற்பரர்கரர் பணிய
அற்புதமாக அற்புதமாக, ஆதி
அற்புதமாக - ஏதும்
4. ஆயர்கள் கூட உயர் ஞானிகள்
தேட - யூத ராயனென்ற தாலே
ஏரோதேயுமே வாட ஏரோதே
வாட , ஏங்கி ஏரோதேவாட-
ஏதும்