எனது பாத்திரம் நிரம்பி வழியுதே
இயேசுவின்அன்பைஎண்ணிடும்போது
1.தகப்பன் என்று சொல்லவும் தகுதியில்லையே
முகத்தை நோக்கிப் பார்க்கவும்
முடியவில்லையே மகனே என்றோடி வந்து
அணைத்திட்டபோது (2)
கால்களில் வீழ்ந்தேன் நான் கதறி அழுதிட்டேன்
(2)
2.பாவியென்று பரிசேயர் சொல்லிட்டபோதும்
பாவிகளைத் தேடி வந்தேன் என்றார் இயேசு
மகனே உன் பாவங்களை மன்னித்தேன் என்றார் (2)
தைலம் ஊற்றியே அவர் பாதம் பணிந்திட்டேன் (2)
3.சிலுவையிலே அறைந்திடவே தேடின போது
நான் தானே இயேசு என்று ஒப்புவித்தாரே
சிநேகிதனே என்றாரே துரோகியைக் கூட (2)
இயேசுவைப் போல ஒரு நண்பர் இல்லையே (2)
4.தேவ சித்தம் செய்திடுவோர் யாவரும் தானே
தாயும் என் சகோதரர் என்றார் இயேசு
பிள்ளைகளே என்றாரே நம்மை மாத்திரமே
(2)
பரம தந்தையின் அன்பு மாறிடாததே
(2)