காப்பார்
உன்னைக் காப்பார்,
காத்தவர்
காப்பார், இன்னும் இனிமேலும், காத்திடுவார்
கலங்காதே
மனமே - காத்திடுவார்
1.கண்டுனை
அழைத்தவர் கரமதைப்பார் - அவர்
கைவிடா
திருப்பார் ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை
எண்ணிப்பார்
எண்ணிப்பார்,
எண்ணிப்பார், எண்ணிப்பார்
என்றுமதை
எண்ணிப்பார் - நீ
2.இஸ்ரவேலுக்கு
வாக்குப்படி இன்பக் கானான்
அளிக்கவில்லையோ?
இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்றும்
பின்னும்
இரங்கவில்லையோ?
இல்லையோ,
இல்லையோ, இல்லையோ
மனஸ்தாபம்
கொள்ளவில்லையோ
3.வீழ்ச்சியில்விழித்துன்னை
மீட்பவரும்
இகழ்ந்து
விடாது சேர்ப்பவரும் சிற்சில வேளையில்
சிட்சையினா
லுன்னைக்
கிட்டியிழுப்பவரும்
ஜெயமும்,
கனமும்,
சுகமும் உனக்கென்று மளிப்பவரும்
4.தாயினரைக்
கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர்
கொடுத்தவரே
காயீனைப்போலுனைத் தள்ளிவிடாதுகை
கொடுத்
தெடுத்தவரே அவரே,
அவரே,
அவரே
அன்பு
கொண்டு மணந்தவரே
5.ஆதரவாய்
பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமா யிருந்தார்
காதலுடனவர்
கைப்பணி
செய்திட
கனிவுடனா தரித்தார்
ஆதரித்தார்,
ஆதரித்தார், ஆதரித்தார்
பரிசுத்தத்தில்
அலங்கரித்தார்