மனுஷரைக் கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே!
அன்பின் கயிறுகளால்
என்னை இழுத்துக் கொண்டவரே! (2)
எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்?
இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? (3)
மனுஷரைக் கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே!
அன்பின் கயிறுகளால்
என்னை இழுத்துக் கொண்டவரே!
(ஒரு) தாயைப் போல அள்ளி அணைத்தீரே
(ஒரு) தகப்பனைப் போல என்னைக் குனிந்து தூக்கினீரே (2) – மனுஷரைக்
உம்மை விட்டுத் தூரம் போன என்னை
நல்லவன் ஆக்கிச் (என்னை) சேர்த்துக் கொண்டவரே (2) – மனுஷரைக்
கிறிஸ்துவின் அன்பை விட்டுப்பிரித்திட எதுவுமுண்டோ?
எதுவும் என்னைப் பிரித்திட முடியாது! (2) – மனுஷரைக்