கும்பிடுகிறேன்
நான் கும்பிடுகிறேன் - எங்கள்
குருவேசுநாதர்
பதங் கும்பிடுகிறேன்!
1.அம்புவி
படைத்தவனைக் கும்பிடுகிறேன் -எனை
ஆண்டவனை,
மீண்டவனைக் கும்பிடுகிறேன்!
2.நம்புமடி
யார்க்கருளைக் கும்பிடுகிறேன்- பவ
நாசனைக்
க்ருபாசனைக் கும்பிடுகிறேன்!
3.தம்பமெனக்
கானவனைக்கும்பிடுகிறேன் - நித்திய
சருவ
தயாபரனைக் கும்பிடுகிறேன்!
4.உம்பர்
தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் - தொனித்
தோசன்னா
ஓசன்னாவென்று கும்பிடுகிறேன்!
5.ஒரே
சருவேசுரனைக் கும்பிடுகிறேன் - ஒன்றும்
ஒப்பதில்லா
மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்!
6.திருவுருவானவனைக்கும்பிடுகிறேன்
- தவிது
சிம்மாசனாதிபனைக்
கும்பிடுகிறேன்!
7.குருவென
வந்தவனைக் கும்பிடுகிறேன் - யூதர்
குருகுல
தேவதையைக் கும்பிடுகிறேன்!
8.அருமை
இரட்சகனைக் கும்பிடுகிறேன் - என
தாத்துமாவின்
நேசர்தனைக் கும்பிடுகிறேன்!