En Jeeva Kaalam Muluthum
என் ஜீவ காலம் முழுதும்
துதிப்பேன் துதித்துப் பாடுவேன்
என் தேவன் அளித்த பெலனை
நினைத்தே நன்றி சொல்கிறேன்
1.
தொலைந்து போன என்னையே
தொழுவம் சேர்ந்த அன்பே
திருந்தி வந்த என்னையே
திரும்பி அணைத்த அன்பே
வறண்டு போன என் வாழ்விலே
வளமை சேர்த்த அன்பே
என்னத் தருவேன் உமக்கு -நான்
என்னைத் தருவேன் உமக்கு
2.கருவில் இருந்த என்னையே
தெரிந்து கொண்ட அன்பே
உதிரம் சிந்தி எனக்குள்
உயிரை வைத்த அன்பே
கரத்தை நீட்டி என் நாவினில்
திருவார்த்தை ஈந்த அன்பே
என்னத் தருவேன் உமக்கு -நான்
என்னைத் தருவேன் உமக்கு
3.குழியில் இருந்த என்னையே
சிகரம் சேர்த்த அன்பே
சிறையில் இருந்த போதும்
சிறக்க வைத்த அன்பே
உம்மைவிட்டு நான் விலகியும்
அணைத்துக் கொண்ட அன்பே
என்னத் தருவேன் உமக்கு -நான்
என்னைத் தருவேன் உமக்கு