Type Here to Get Search Results !

தேவ பயம் என் ஜீவ காலம் | Tamil Christian Songs

தேவ பயம் என் ஜீவ காலம்

தேவனின் வழியில் நீயும் நடந்தால் 

உனக்குள் இல்லை உலக பயம்

தேவ பயம்...


வெல்லுவேன் வெல்லுவேன் உலகத்தை

வெறுப்பேன் வெறுப்பேன் தீமையை (2) 

ஆனந்தம் ஆனந்தம் 

தேவ பயம் இருந்தால் பேரின்பம் 

அல்லேலூயா (2)


 1. பாவத்தின் வழியை உதறிடு

சுத்த வழியில் நடந்திடு 

தேவனின் கிருபையில் பெருகிடு

உலகத்தின் மாயையை

ஜெயித்திடு (2) - வெல்லுவேன்


2. தேவனின் பாதத்தில் அமர்ந்திரு

தேவனின் வார்த்தையில் நிலைத்திரு

தேவனுக்காய்  நீ வாழ்ந்திடு

தேவ இராஜ்ஜியம்

வென்றிடு (2) - வெல்லுவேன்