ஜெபம் கேளுமே, கிருபை தாருமே,
ஜெபம் கேளும்.
சரணங்கள்
1. கண்களில் காண்பவை யாவும் அநித்தியம்,
காணப்படாதவை யாவுமோ நித்தியம்;
கருத்துடன் உணர்ந்து கர்த்தனைப் பணிய
உணர்வு - உணர்வு தாருமே. - ஜெபம்
2. என் பெலன் யாவும் என்னை விட்டகலும்,
நின் பெலனில் யான் நிலைபெறச் செய்யும்,
வன்மை நீர் தாரும் வல்லமை தேவா!
வன்மை - வன்மை தாருமே. - ஜெபம்
3. கையின் காசும் கண்டிடும் காணபோல்
வையக மீதினில் காய் விட்டோடிடும்;
மெய்ப்பொருளாம் நின் அருளில் மகிழ,
அருளை - அருளைத் தருமே, - ஜெபம்
4.துன்பங்கள் சூழ, ஞானமும் மூழ்க
இன்பங்கள் மாற, கண்ணீரும் ஊற,
உம் பரலோக ஞானம் பெற்றுறவே
ஞானம் - ஞானம் தாருமே. - ஜெபம்
5. அழகின் பெருமை அழிவைத் தான் தருமே,
அணிந்திடும் அழகும் ஆக்கினையாமே,
தேவ பக்தியாம் தேக சிங்காரம்
பக்தி பக்தி தாருமே. - ஜெபம்
6. கர்த்தனே! உம்மில் கனிவுடன் மகிழ,
கர்த்தர் நீரேற்ற சிலுவையைப் புகழ,
கற்புடன் உய்துன் தொண்டு யான் புரிய
கற்பு - கற்பு தாருமே. - ஜெபம்
7. ஈகிறேன், ஐயா! என்னையே மெய்யாய்
ஆத்துமா ஆவி தேகமும் உமக்காய்;
ஏற்றுக்கொள், ஐயா! அன்புடன் உய்ய,
அன்பு- அன்பு தாருமே - ஜெபம்
8. மாம்ச சுபாவத்தை மனதார அழிக்க,
திவ்விய சுபாவத்தைத் தீர்க்கமாய்த் தரிக்க,
தூயா ! நின் வருகையில் தூய்மையாய்க் காண
தூய்மை - தூய்மை தாருமே. -ஜெபம்