Type Here to Get Search Results !

ஏங்குகிறேன் தேவா | Yengukiren Deva | Tamil Christian Song Lyrics

ஏங்குகிறேன் தேவா.. 

எழுப்புதலைக் காண..

எந்தன் நாட்களிலேயே காணனுமே! 

என் சொந்த கண்களாலேயே காணனுமே! -2

ஒவ்வொருவருக்குள்ளும் கிறிஸ்து கருவாகணும்! 

கிறிஸ்துவிற்குள் ஒவ்வொருவரும் உருவாகணும்!

ஒவ்வொருவருக்குள்ளும் கிறிஸ்து கருவாகணும்! 

கிறிஸ்துவிற்குள் ஒவ்வொருவரும் உருவாகணும்!

அந்த எழுப்புதல் இந்த நாளிலே 

அருளும் ஆவியே! அருளும் ஆவியே!

அந்த எழுப்புதல் எந்தன் ஜனத்திலே 

அருளும் ஆவியே! அருளும் ஆவியே! 

1. உந்தன் ஜனம்.. உம்மில் மகிழ்ந்திருக்க..

எந்தனை திரும்பவும் உயிர்ப்பியுமே!

உந்தன் ஜனம்.. உம்மில் மகிழ்ந்திருக்க..

எந்தனை திரும்பவும் உயிர்ப்பியுமே!

உந்தன் மனம் என்னை பற்றி களிகூர்ந்திட..-2

சொந்தமாக்கி என்னை மறுரூபமாக்குமே -2

ஒவ்வொருவருக்குள்ளும் கிறிஸ்து கருவாகணும்! 

கிறிஸ்துவிற்குள் ஒவ்வொருவரும் உருவாகணும்!

ஒவ்வொருவருக்குள்ளும் கிறிஸ்து கருவாகணும்! 

கிறிஸ்துவிற்குள் ஒவ்வொருவரும் உருவாகணும்!

அந்த எழுப்புதல் இந்த நாளிலே 

அருளும் ஆவியே! அருளும் ஆவியே!

அந்த எழுப்புதல் எந்தன் ஜனத்திலே 

அருளும் ஆவியே! அருளும் ஆவியே! - ஏங்குகிறேன்

2. வளருகிறேன் என்று நான் வலுவிழந்த..

மழலை அன்பில் மறுபடியும் உயிர்ப்பியுமே!

வளருகிறேன் என்று நான் வலுவிழந்த மழலை 

அன்பில் மறுபடியும் உயிர்ப்பியுமே!

உமக்காக ஓடியே உம்மைவிட்டு ஓடினேன் -2

ஒரு விசை என் ஜெப வாழ்வை உயிர்ப்பியுமே

ஒரு விசை உம் சமுகத்தால் உயிர்ப்பியுமே!

ஒவ்வொருவருக்குள்ளும் கிறிஸ்து கருவாகணும்! 

கிறிஸ்துவிற்குள் ஒவ்வொருவரும் உருவாகணும்!

ஒவ்வொருவருக்குள்ளும் கிறிஸ்து கருவாகணும்! 

கிறிஸ்துவிற்குள் ஒவ்வொருவரும் உருவாகணும்!

அந்த எழுப்புதல் இந்த நாளிலே 

அருளும் ஆவியே! அருளும் ஆவியே!

அந்த எழுப்புதல் எந்தன் ஜனத்திலே

 அருளும் ஆவியே! அருளும் ஆவியே! - ஏங்குகிறேன்

3. பிரசங்க பீடத்தில் பெலவானானேன் 

பிரசன்ன வாழ்விலே பெலனற்றுப் போனேன் 

எழுப்புதல் தேசத்திலே காண விரும்பினேன் -2

இன்று எழுப்பிடுமே என்னை என கதறுகிறேன்! -2

ஒவ்வொருவருக்குள்ளும் கிறிஸ்து கருவாகணும்! 

கிறிஸ்துவிற்குள் ஒவ்வொருவரும் உருவாகணும்!

ஒவ்வொருவருக்குள்ளும் கிறிஸ்து கருவாகணும்! 

கிறிஸ்துவிற்குள் ஒவ்வொருவரும் உருவாகணும்!

அந்த எழுப்புதல் இந்த நாளிலே 

அருளும் ஆவியே! அருளும் ஆவியே!

அந்த எழுப்புதல் எந்தன் ஜனத்திலே அ

ருளும் ஆவியே! அருளும் ஆவியே! - ஏங்குகிறேன்

எழுப்புதல் உம்நேசமே!

எழுப்புதல் உம்சாயலே!

எழுப்புதல் உம் ஆளுகையே! 

எழுப்புதல் உம் ராஜ்ஜியமே!

 ஏங்குகிறேன் தேவா.. எழுப்புதலைக் காண..

எந்தன் நாட்களிலேயே காணனுமே!

என் சொந்த கண்களாலேயே காணனுமே!