Type Here to Get Search Results !

பரிபூரண ஆனந்தம் நீங்க தானே | Tamil song | Jebathottam Vol 41

பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே
இயேசு ராஜா என் நேசரே
எல்லாமே நீங்க தானே

இம்மானுவேல் இயேசுராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா

1. தேவையான ஒன்று நீங்க தானே
எடுபடாத நல்லபங்கு நீங்க தானே
அன்புகூர்ந்து பலியானீரே
இரத்தம் சிந்தி இரட்சித்தீரே

2. கிருபையினால் மீறுதல்கள் மன்னித்தீரே
இரக்கத்தினால் வியாதிகள் நீக்கினீரே
அன்பினாலும் மகிமையினாலும்
முடிசூட்டி மகிழ்கின்றீர்

3. குழியிலிருந்து மீட்டீரே நன்றி ஐயா
உன்னதத்தில் அமரச் செய்தீர் நன்றி ஐயா
எனையாளும் தகப்பன் நீர்தான்
எனக்குரிய பங்கும் நீர்தான்