Type Here to Get Search Results !

சிந்திக்க வாரீர் செயல் வீரரே - Sinthikka vaareer seyal veerare - Tamil Lyrics song

சிந்திக்க வாரீர் செயல் வீரரே 
சிந்திய இரத்தம் கூப்பிடுதே -2
சிந்திய இரத்தம் கூப்பிடுதே -3

சபையே நீ திரும்பிப் பார்
சபையே நீ குனிந்துப் பார்
சபையே நீ நிமிர்ந்துப் பார்
முன்னேப் பார் -3

1.பூர்வ நாட்களை நினைத்துப் பார்
பூர்வ பாதைகளை விசாரித்து அறி
இளைப்பாறுதல் அதுவே ஆத்துமாவுக்கு
களைப்பை போக்கிடுமே போதுமதுவே

2.தாழ்மை உள்ளோருக்கு தரும் கிருபை
முழங்கால் முடக்கிக் குனிந்துபார்
வணங்காக் கழுத்துனக்கு வேண்டாமே
வனாந்தரத்தில் அதினால் அழிவாமே

3.வானத்தின் சத்துவங்கள் அசைவதைப்பார்
வானவரின் வருகை சமீபமே
நிமிர்ந்து பார் உன் மீட்பு நெருங்குதே
நிலைத்திருப்பவைகளையே நாடு நீயே

4.கண்களை ஏறெடுத்துப் பார் வயல்தனை
கண்டிப்பாய் செயல்பட வேண்டுமே
அழியும் கணிகளைப் பொறுக்காவிடில்
அழுகை தான் தங்கிடுமே வருகையிலே