ஜெபமுள்ள வாழ்வு தாருமே தேவா
உந்தனின் உள்ளம் அறிந்திடவே
1.உந்தனின் விருப்பம் என்றுமே செய்ய
வேதத்தின் சத்தம் கேட்கணுமே
உம் சமூகம் நான் நாடி வந்தால் தான்
உம்திரு குரல் என் காதுகள் கேட்கும்
2.உம் திருசித்தம் செய்திட நித்தம்
என் சுய சித்தம் சாகனுமே
சிலுவையைச் சுமந்து செய்திட யுத்தம்
கோதுமை மணியாய் மடியணுமே
3.உம் சித்தம் செய்யும் என் சித்தம் வேண்டாம்
தேவனே எனக்கு உதவிடுமே
உம் சித்தம் செய்ய உம் சிந்தை தந்து
ஆவியின் பெலனும் கிருபையும் தாரும்