விழித்திடு! விழித்திடு! இளைஞனே – உன்
விழிகளைத் திறந்திடு நண்பனே
எழும்பிடும் விழித்தெழும் காலமாயிற்றே (2)
துரிதமாய் ஓடிடு நின்றிடமலே – நீ (2)
நாதனின் நற்செய்தி முழங்கனுமே !
கிறிஸ்து இயேசு நாமம் உயரனுமே!
இருளில் நீ நடந்தால் நிழல் கூட தொடராதே
துவண்ட உன் இதயம் துளிர்விடட்டுமே
1. இன்றும் போல் என்றும் இளமை நிலைக்குமோ?
இன்பங்கள் இறுதிவரை யாவும் வந்திடுமோ ?
வாலிபத்தின் நாட்களெல்லாம்
வாடியுதிரும் பூக்கள் அன்றோ !
இன்றே அதை நீ உணர்ந்திடு!!
இறைவன் அண்டை விரைந்திடு!
2 பலமுறை விழுந்தாலும் பரமனை தேடு
பாவத்தை நீ வெறுத்து பரிசுத்தம் நாடு
துயவரின் சிந்தை உன் உள்ளத்திலே விளங்கட்டும்
கடந்ததை நீயும் மறந்திடு!
கர்த்தர் அண்டை வந்திடு!