அன்பை தாருமே - உந்தன்
அன்பை தாருமே (2)
அன்பில்லாமல் நான் செய்யும்
எல்லாக் கிரியையும் குப்பையே (2)
அன்பை தாருமே - உந்தன்
அன்பை தாருமே
1.மனிதர் பாஷை பேசினாலும்
தூதர் பாஷை பேசினாலும்
அன்பில்லை என்றால் - நான்
ஒன்றுமில்லையே (2)
2.வரங்கள் எனக்கு இருந்தாலும்
இரகசியத்தை நான் அறிந்தாலும்
அன்பில்லை என்றால் - நான்
ஒன்றுமில்லையே (2)
3. மலைகளைப் பெயர்க்கும் விசுவாசம்
உடையவனாய் நான் இருந்தாலும்
அன்பில்லை என்றால் - நான்
ஒன்றுமில்லையே (2)