நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ இல்லாத வாழ்வெல்லாம்
வாழ்வாகுமா (2)
1.உயிரின் ஊற்றே நீயாவாய்
உண்மையின் வழியே நீயாவாய்
உறவின் பிறப்பே நீயாவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீயாவாய்!
2.ஒளியின் சுடரும் நீயாவாய்
ஒலியும் ஓசையும் நீயாவாய்
ஓசையும் தாளமும் நீயாவாய்
ஒலிக்கும் வெண்கலமும் நீயாவாய்!
3.எனது ஆற்றலும் நீயாவாய்
எனது வலிமையும் நீயாவாய்
எனது அரனும் நீயாவாய்
எனது கோட்டையும் நீயாவாய்!
4.எனது நினைவும் நீயாவாய்
எனது மொழியும் நீயாவாய்
எனது மீட்பும் நீயாவாய்
எனது உயிர்ப்பும் நீயாவாய்!