Type Here to Get Search Results !

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்! பரலோகராஜ்யம் அவர்களுடையது:

பழைய ஏற்பாட்டில் "விருத்தசேதனம்" யூதர்களுக்கு ஒரு முக்கிய அடையாளமாய் இருந்தது. புதிய ஏற்பாட்டிலோ இந்த விருத்தசேதனத்தின் ஆவிக்குரிய விளக்கத்தை காண்கிறோம். "மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மை பாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்" என பிலிப்பியர் 3:3 கெம்பீரமாய் எடுத்தது கூறுகிறது.

இவ்வாறு புதிய ஏற்பாட்டின் விருத்தசேதனத்திற்கு ஒப்பாய் "மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல்" வாழும் வாழ்க்கைக்கு இயேசுவே நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார். யோவான் 5:19 -ம் வசனத்தில் " மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதுதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்" என இயேசு வெளிப்படுத்திய ஆச்சரியமான வாக்கியத்தை கண்டீர்களா? இப்பூமியில் இயேசு கிறிஸ்து எவ்வளவாய் தன் ஆவியில் தரித்திரம் கொண்டிருந்தார் என்பதையே இந்த வசனம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இன்னமும் இதே யோவான் 5:30-ல் "நான் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை" எனவும் இயேசு கூறினார் என்ன... மெய்யாகவே இயேசுவால் தானாக ஒன்றும் செய்யமுடியாத? நாம் எவ்வாறு நாமாகவே பல காரியங்களை செய்ய முடியுமோ அதேபோல் இயேசுவும் அவராகவே அநேகக் காரியங்களைச் செய்திட கூடுமே!

ஆனால் தானாகவே செய்யும் எந்தக் காரியத்திற்கும் "ஆவிக்குரிய மதிப்பு" ஒரு துளியும் கிடையாது!

ஆவிக்குரிய ஏழ்மைக்கு மற்றோரு எடுத்துக்காட்டாக "சிறு பிள்ளையை" இயேசு சுட்டிக்காட்டினார், தேவ வெளிப்பாட்டைக் குறித்து இயேசு குறிப்பிடும்போது "இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்" என பிதாவிடம் ஜெபித்தார் (மத்தேயு 11:25) ஆவிக்குரிய ஏழ்மையில் வாழ விரும்புகிற நாம் எடுத்து கொள்ள வேண்டிய ஸ்தானம், இந்த பாலகனின் ஸ்தனமே ஆகும்! தொட்டில் படுத்து உறங்கும் இரண்டு அல்லது மூன்று மாத பாலகனை கற்பனைசெய்து பாருங்கள் அக்குழந்தை தானாக எதையுமே செய்ய முடியாது! தான் ஒவ்வொரு சிறிய செயலுக்கும் தன் தகப்பனையும் தாயையுமே சார்ந்திருக்கிறது, பரலோகராஜ்யத்தை சுதந்தரிப்பவர்களும் இதுபோன்ற குழந்தையாக மாற வேண்டும் இயேசு போதித்தார். இக்குழந்தை போலவே சார்ந்து வாழும் வாழ்க்கையே ஆவிக்குரிய ஏழ்மையாகும். இவ்வாறு ஆவிக்குரிய ஜீவியமோ அல்லது ஊழியமோ செய்வதற்கு தன் இயலாமையை உணர்ந்து முழுவதுமாக தேவனையே சார்ந்து வாழும் வாழ்க்கையே விசுவாச வாழ்க்கை ஆகும். " விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் " குறிப்பிடப்பட்ட கூட்டத்தார் இவர்களே ஆவார்கள்!

காரியம் இவாறாக இருப்பதால், தன் ஆவிக்குரிய தரித்திரத்தை உணராத யாராய் இருந்தாலும் அவர்களிடத்தில் உண்மையான விசுவாசம் இல்லையென திட்டமாகக் கூறிவிடலாம். தன் நிர்கதியை உணர்ந்து, சர்வஞானமும் சர்வ வல்லமையும் அன்பும் நிறைந்த தன் ஆண்டவரை நம்பி அவரையே சார்ந்துகொள்ளும் விசுவாச வாழ்க்கையே உண்மையான ஆவிக்குரிய ஏழ்மை ஆகும் !

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்! பரலோகராஜ்யம் அவர்களுடையது: