ஒரே ஒரு ஜீவியம் கடந்திடும் சீக்கிரம்
இயேசு இல்லாத வாழ்வு பூஜ்ஜியம்
1. மாயலோகை நம்பி நீயும் மாண்டது போதும்
சிற்றின்பத்தில் சிக்கி நீயும் சிதைந்தது போதும்
மாறாத நேசர் உண்டல்லோ
மாற்றுவார் உந்தன் வாழ்வையும்
காண்பதெல்லாம் அழிந்திடும்
அவர் தானே நித்தியம் - என வாலிபம்
2.அங்கும் இங்கும் அலைந்து நீயும் திரிந்தது போதும்
வழி தெரியாமல் தடுமாறி திகைத்தது போதும்
பாதை காட்டிட வந்தார்
இயேசுவே வழியுமாயினார்
உன்னை கொடு அவரிடம்
நடத்திடுவார் அனுதினம் - என் வாலிபம்
3. இந்த மட்டும் குந்தி குந்தி நடந்தது போதும்
இருமனமாய் நிலையின்றி வாழ்ந்தது போதும்
இரட்சண்ய நாளும் இதுவே
அர்ப்பண நேரம் இதுவே
எனது எல்லாம் உமதாகும்
உமது எல்லாம் எனதாகும் – என் வாலிபம்