கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே
சாவு எங்கள் ஆதாயமே
இலக்கை நோக்கி என்றும் ஓடுவோம்
அன்பர் இயேசு பின் செல்லுவோம்
1.இரத்தம் சிந்த நேர்ந்தாலும்
பாவம் செய்வதில்லையே
இயேசுவுக்காய் வாழுவோம்
இறுதி நாள் வரை
எங்கள் ஜீவன் இயேசுவுக்கே சொந்தம்
எங்கள் வாழ்வும் இயேசுவுக்கே சொந்தம்
2.இம்மைக்கேற்ற இன்பங்கள்
சிறிதளவும் நாடிடோம்
உலகம் எங்கள் குப்பையே
என்று முழங்குவோம் – எங்கள்
3. பந்தயத்தில் ஜெயம் பெற
தூய்மையோடு ஓடுவோம்
ஜீவ கிரீடம் தருவார்
ஜீவ தேவனே - எங்கள்