என் ஜீவன் ஆனாலும் சாவானாலும்
பின்பற்றுவேன்
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
பின்னேயும் நேசித்தீர் என் இயேசுவே
1. பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே மறந்து போனேன்
பரிசுத்த ஆவி பருகிட செய்யும்
நித்தமும் உம் சித்தம் செய்திடவே – என் ஜீவன்
2. உலகின் மாயை
வலையில் விழுந்தேன்
தப்பிடாமல் சிக்குண்டேனே
உன்னத ஆவி ஊற்றுமே தேவா
உலகத்தின் பெருமையை
வெறுத்திடவே – என் ஜீவன்
3. கல்வாரி சிநேகம்
சொல்ல மறந்தேன்
கள்ளனையும் மாற்றும் விந்தை
உற்சாக ஆவி தாங்கிட செய்யும்
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே –என் ஜீவன்