ஜீவ தண்ணீர் வேண்டும் என்
தாகம் தீர வேண்டும்
உலகத்தின் மீதும் பாவங்களின் மீதும்
தாகமில்லா வாழ்க்கை வேண்டும் – எனக்கு
தேவா என்னையும் நிரப்புமே
இந்த வாழ்க்கையை தாருமே -- ஜீவ
1. ஆதி சபையில் தூய ஆவியை
அப்போஸ்தலர் மேல் ஊற்றினீரே
இயேசுவே என்னையும்
அந்த தூய ஆவியால்
அனுதினம் அபிஷேகியும் – தேவா
2. பரிசுத்த ஆவி உங்களிடம் வர
பெலனை பெற்றிடுவீர் என்றீர்
வாழும் இடத்திலும் செல்லும் இடத்திலும்
சாட்சிகளாய் இருப்பீர் என்றீர் – தேவா