பாலகன் போல் தன்னைத்
தாழ்த்திடுவது யார் - சிறு
பார்தனில் தன்னை மறந்தவன்
மாட்சியிலுத்தமனேயவன்
1.தந்திடும் தாசனுக்குந்தன்
தாழ்மையிக்ஷணமே
வந்திடும் எந்தனைக் கேளும்
கண்டிடும் கறைகள் தீரும்
2.கொந்தளிப்பாகும் வேளை
சொரிந்திடும் கிருபை
உந்தன் ஒத்தாசை ஈந்து
உள்ளத்தில் ஊற்றும் தாழ்மை
3.பாதகர்பகடி செய்தும்
மௌனமானவா
நாதா உன் வழியில் நடக்க
தோறும் கருணை தாரும்
4.தாழ்மையால் நீதியும்மைக்
கடந்து போனதே
தாழ்மையிலமிழ்ந்து நிற்க
தாகிக்குதென் முழு உள்ளமே
5.ஆவியிலெளிமையுள்ளவன்
இராஜ்ஜியமடைவான்
தாவியுன் பாதகமடைந்தேன்
ஆவியால் நடத்திக்காரும்.