தேவன் சொன்னார் செய்ய
வல்லவன் என்று
நானும் செய்வேன் வல்லக்கிரியைகளை
1.என்னில் அன்பு கொள்ளுவதுபோல
பிறனில் அன்பு கொள்ளுவேன்
அன்பு கொள்ளும் வல்லமையை
தேவனிலே பெற்றிடுவேன் (2)
2.பொல்லாங்காய் தோன்றும்
எதனிலும் என்னை
விலக்கிக் கொள்ளுவேன்
விலக்கிக் கொள்ளும் வல்லமையை
இயேசுவிலே பெற்றிடுவேன்
3.எல்லாரிலும் சிறியவனாய்
எப்போதும் நான் இருந்திடுவேன்
ஊழியம் செய்யும் வல்லமையை
இயேசுவிலே கற்றிடுவேன்
4.பாடுகளினால் என்றென்றும்
கீழ்ப்படிதல் பெருகுமே
கீழ்ப்படியும் வல்லமையை
கிறிஸ்துவிலே பெற்றிடுவேன்
5.என் இதய நம்பிக்கையை
நாவினால் அறிவிப்பேன்
அறிக்கை செய்யும் வல்லமையை
பிதாவினால் நடப்பிப்பேன்!