என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே - என்றும்
நன்மைகள் செய்பவரே -என்றும்
நன்மைகள் செய்பவரே
1.
மனிதர் தூற்றும் போது -உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத்தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே
2.
தனிமை வாட்டும் போது
நல் துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே
3.
வாழ்க்கைப் பயணத்திலே
மேகத் தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே