Type Here to Get Search Results !

ஒப்பற்ற என் செல்வமே பாடல் வரிகள்


ஒப்பற்ற என் செல்வமே
எந்தன் இயேசு நாதா
உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் - நான்
உம் பாதம் ஓடி வந்தேன்

1. உம்மை நான் ஆதாயமாக்கவும்
உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பை என
எந்நாளும் கருதுகிறேன் -நான் (2)

2. என் விருப்பம் எல்லாமே
இயேசுவே  நீர் தானன்றோ
உமது கிருபை ஒன்றே
உள்ளத்தின் ஏக்கம் ஐயா -என் (2​)

3.கடந்ததை மறந்தேன்
கண் முன்னால் என் இயேசுதான்
தொடர்ந்து ஓடுவேன்
தொல்லைகள் என்ன செய்யும் - (2)