என்
சித்தமல்ல உம் சித்தம் நாதா
என்னாலேயல்ல
உம்மாலே ஆகும் நாதா
அடிமை
நானே எஜமான் நீரே நாதா
பெலவீனன்
நானே பெலவான் நீரே நாதா
காலையில்
தோன்றி மாலையில் மறைபவன் நாதா
மலர்போல்
பூத்து நிழல் போல் மறைவான
நாதா
மண்ணான
மனிதன் நான்
மண்ணுக்கே
திரும்புவேன் நாதா
பாதகன்
என்மேல் பாசம் கொண்டீரே நாதா
பாரெல்லாம்
உம் புகழ் பாடி மகிழ்வேன்
நாதா
உம்
திரு இரத்ததால் மீட்டுகொண்டீரே நாதா
உம்
செல்ல பிள்ளையாய் சொந்தாமானேன் நாதா