ஐயையா, நான் பாவி என்னை
ஆளும் தயாபரனே!
1. பொய்யாம் உலக உல்லாசத்தினால்
மனம் போனவழி நடந்தேன்-
ஏசையா, அபயம்! அபயம்! இரங்கும்,
மே சையா, என் தாதாவே,
2. எத்தனை சூதுகள், எத்தனை
வாதுகள் எத்தனை தீதுகளோ?
எனது அத்தனே! என்
பிழை அத்தனையும் பொறுத்
தாண்டருளும், கோவே,
3. வஞ்சகமோ, கரவோ, கபடோ
மாய் மாலமோ,
ரண்டகமோ? மனச் சஞ்சலம் நீக்கி
எனக்கருள் செய்யும், சமஸ்த
நன்மைக் கடலே
4. பொய்யும், புரட்டும்,
உருட்டும், திருட்டும்
பொறாமையும், ஆணவமும்
விட் டுய்யும்படி அருள் செய்யும்
அனதி ஓர் ஏகதிரித்துவனே
5. உன்னை எல்லாத்திலும்
பார்க்கச் சிநேகித்
தூனதடியார்களையும், நான்
என்னைச் சிநேகிக்கிறார் போல்
சிநேகிக்க ஏவும், பராபரனே
ஆளும் தயாபரனே!
1. பொய்யாம் உலக உல்லாசத்தினால்
மனம் போனவழி நடந்தேன்-
ஏசையா, அபயம்! அபயம்! இரங்கும்,
மே சையா, என் தாதாவே,
2. எத்தனை சூதுகள், எத்தனை
வாதுகள் எத்தனை தீதுகளோ?
எனது அத்தனே! என்
பிழை அத்தனையும் பொறுத்
தாண்டருளும், கோவே,
3. வஞ்சகமோ, கரவோ, கபடோ
மாய் மாலமோ,
ரண்டகமோ? மனச் சஞ்சலம் நீக்கி
எனக்கருள் செய்யும், சமஸ்த
நன்மைக் கடலே
4. பொய்யும், புரட்டும்,
உருட்டும், திருட்டும்
பொறாமையும், ஆணவமும்
விட் டுய்யும்படி அருள் செய்யும்
அனதி ஓர் ஏகதிரித்துவனே
5. உன்னை எல்லாத்திலும்
பார்க்கச் சிநேகித்
தூனதடியார்களையும், நான்
என்னைச் சிநேகிக்கிறார் போல்
சிநேகிக்க ஏவும், பராபரனே