கடவுளை மனிதன் விலகுதல் பாவம்
நித்தியம் அவரைப் பிரிந்தால் நரகம்
அங்கே அகோரம் அழிவின்
பாதாளம் அங்கு செல்வோர்
வாழ்வும் பரிதாபம்!
1. படைப்புக்கு நிகராய் கடவுளை
மதித்து கற்பனை வடிவம்
தருவது பாவம் மெய்
தேவனைத் தள்ளி
சொரூபங்கள் முன்னே
வீழ்ந்து வணங்குதல்
மாபெரும் துரோகம்!
2. மனம்போன பாதையில்
தொலைவது பாவம்
நெறிகெட்டுத் திரிவது
கீழ்த்தரமாகும் தேவனின்
கட்டளை மீறுதல் பாவம்
அக்கிரம சிந்தையும்
அசுத்தமும் பாவம்!
3. அன்பில்லா செயல்கள்
அனைத்துமே பாவம்
அடிமைப்படுத்தும் எல்லாம்
பாவம் நன்மை செய்யத்
தவறுதல் பாவம் சாவை
விரும்பும் சபலமும் பாவம்!
4. இயேசுவின் தெய்வீகம்
மறுப்பது பாவம் - அவர்
பாவப்பரிகாரம் அலட்சியம்
பாவம் கடவுளின் ஆட்சியை
எதிர்ப்பது பாவம் இடறலாய்
வாழும் துணிகரம் பாவம்!