உம் சித்தம் தேவா, நடப்பியும்
நான் ஓர் மண்பாண்டம்
உம் கையிலும்
உம் பாதத்தண்டை காத்திருக்கும்
என்னை உம் சித்தப்படி மாற்றும்
2. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
என் இதயத்தை ஆராயுமே
உம் சமூகத்தில் தாடிநந்திருக்கும்
என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும்
3. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
காயப்பட்ட என்னை நோக்குமே
எல்லாம் வல்ல என் ஆண்டவரே
என்னைத் தொட்டுக் குணப்படுத்தும்
4. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே
கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்பட
என்னை உம் ஆவியால் நிரப்பும்!