Type Here to Get Search Results !

Tamil Song - 744 - Nampivanthen Mesaiyaa

நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே; திவ்ய
சரணம்!þசரணம்! சரணமையா, நான்
நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே தஞ்சமே
தருவனே - வரு
தாவீது குமரகுரு பரமனுவேலே,
நம்பி வந்தேனே - நான்

2. நின்பாத தரிசனம் அன்பான
கரிசனம் - நித
நிதசரி தொழுவதிதம் என
உறுதியில் நம்பிவந்தேனே - நான்

3. நாதனே கிருபைகூர், வேதனே,
சிறுமைதீர் - அதி
நலம் மிகு உனதிரு திருஅடி
அருளே, நம்பிவந்தேனே - நான்

4. பாவியில் பாவியே,
கோவியில் கோவியே; கன
பரிவுடன் அருள்புரி, அகல
விடாதே; நம்பிவந்தேனே

5. ஆதி ஓலோலமே,
பாதுகா காலமே; உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்

மெத்த, நம்பிவந்தேனே!