Type Here to Get Search Results !

Tamil Song - 746 - Neer Ennodu Irukkum Poothu

நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)
தோல்வி எனக்கில்லையே - நான்
தோற்றுப் போவதில்லையே (2)

1. அலைகடல் தாண்டிடுவேன் - கடும்
பள்ளங்களை கடந்திடுவேன் (2)
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் (2)
அல்லேலூயா - (8)

2. மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே (2)
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே (2)
அல்லேலூயா - (8)

3 சிறைச்சாலைக் கதவுகளும் - என்
துதியினால் உடைந்துவிடும்
அபிஷேகம் எனக்குள்ளே - நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன் (2)
அல்லேலூயா - (8)