எல்லாருக்கும் மா உன்னத
கர்த்தாதி கர்த்தரே
மெய்யான தேவ மனிதன்
நீர் வாழ்க (4) இயேசுவே!
2. விண்ணில் பிரதானியான நீர்
பாவிகட்காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்;
நீர் வாழ்க (4) இயேசுவே!
3. பிசாசு, பாவம், உலகம்
இச்சத்துருக்களை
அழிந்துபோக மிதியும்
நீர் வாழ்க (4) இயேசுவே!
4. நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்!
நீர் வாழ்க (4) இயேசுவே!
5. விண்ணோர்களோடும்
மண்ணுள்ளோர் என்றைக்கும்
வாழ்கவே
பரம வாசல் திறந்தோர்
நீர் வாழ்க (4) இயேசுவே!