எப்போதும், இயேசு நாதா
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்கு கொடுத்தேன்
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
அப்போது அஞ்சிடேன்
முன்சென்று பாதை காட்டும்
நான் வழி தவறேன்
2. பூலோக இன்பம், செல்வம்
வீண் ஆசாபாசத்தால்
என் ஆத்மா மயங்காமல்
தெய்வீக பலத்தால் நீர்
துணை நின்று தாங்கும்
என் அருள் நாயகா
மா வல்ல ரட்சகா
3. ஆங்காரம் சுய சித்தம்
தகாத சிந்தையால் மா கலக்கம்
உண்டாகி நான் தடுமாறினால்
நீர் பேசும் அருள்நாதா
கொந்தளிப்படங்கும்
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்
4. பின்பற்றினால் விண் வீட்டில்
பேரின்பம் பெறுவீர்
என்றே உம் சீஷர் நோக்கி
நீர் வாக்கு அளித்தீர்
அவ்வருள் வாக்கை நம்பி
இவ்வேழை அடியேன்
இதோ பின்செல்வேன்
என்று பிரதிக்னை
பண்ணினேன்!